[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

chance-for-heavy-rain-in-tamilnadu

தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக மழை பெய்கிறது. பல்வேறு இடங்களில் இரவில் கனமழை பெய்யும் அதேவேளையில் பகல் நேரங்களில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்கிறது. இதேபோல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. சிவகங்கை, சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி, கோவில்பட்டி, விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மழை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close