[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

‘இரண்டு மாவட்டங்களாக மதுரையை பிரிக்க வாய்ப்பு’ - செல்லூர் ராஜூ

madurai-likely-to-divided-into-two-districts-says-minister-sellur-raju

மதுரையை இரண்டு மாவட்டங்களாக பிரித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தேவைக்கு ஏற்ப புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி புதிய பேருந்துகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்து வருவதாக தெரிவித்தார். 

மேலும், தமிழகத்தில் புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்துள்ளார்.  மக்கள் விருப்பப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தை பிரிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தன்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் பழனிசாமி, திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close