[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-17-08-2019

ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது. பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்த நிலையில், சீனா, பாகிஸ்தான் ஏமாற்றம் அடைந்தன.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவ, தொடர்ந்து முயற்சிப்பதாக காஷ்மீர் தலைமைச் செயலர் தகவல். இதனையடுத்து உளவுத் துறை எச்சரிக்கையால் பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை, சூழலை பொருத்து மாறக் கூடும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார் அத்திவரதர். கடைசிநேரத்தில் அத்திவரதரை தரிசிக்க நள்ளிரவு வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close