[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி

seeman-visit-nilgiris-and-said-advice-to-ruling-party-and-opposite-party

ராகுல் காந்தி கூறியது போல எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் தான் முக்கியம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குருத்துக்குளி மற்றும் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளைப் சீமான் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறுவதை விட்டுவிட்டு, மக்கள் நலப்பணிகளில் அக்கறை செலுத்தவேண்டும்” என்று கூறினார்.

அத்துடன், “நீர்நிலைகளை முறையாக தூர்வாரி இருந்தால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்காது. நீலகிரியில் உள்ள பல விளை நிலங்களில் குத்தகை அடிப்படையில் பலர் விவசாயம் செய்கின்றனர். எனவே நன்கு விசாரித்து குத்தகைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமே தவிர, நில உரிமையாளர்களுக்கு அந்த தொகை சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரளாவில் ராகுல் கூறியதுபோல, எந்தக்கட்சியாக  இருந்தாலும் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற நிலைப் பாட்டில், இங்குள்ள கட்சிகள் செயல்பட வேண்டும்” என்று சீமான் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close