[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

ரஜினி கூறியிருப்பது நல்லக் கருத்து - ஜெயக்குமார் 

jayakumar-speech-about-rajini-speech

நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது நல்லக்கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது, ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மோடி மற்றும் அமித்ஷா அதை மாற்றி இருக்கிறார்கள். ஆதரவு குறைவாக இருக்கும் மாநிலங்களவையில் முதலில் மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர். 

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. எதை அரசியல் ஆக்க வேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ரஜினிகாந்த் தெரிவித்திருக்கும் கருத்து சரியானது. நல்லக் கருத்து. உறுதியான நெஞ்சத்தோடு கருத்தை தெரிவித்துள்ளார். கூட்டணி என்பது குறித்து தேர்தல் சமயத்தில் முடிவு செய்ய வேண்டியது. மேடையில் ஒன்றாக அமர்ந்துவிட்டதால் கூட்டணி என்று உறுதி செய்து விட முடியாது” எனத் தெரிவித்தார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close