[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

நாட்டின் பாதுகாப்பில் அரசியல் செய்யாதீர்கள் : ரஜினிகாந்த் காட்டம்

rajini-speech-about-kashmir-issue

காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் ராஜதந்திரத்தை கையாண்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. அது ஏமாற்றமே.

காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது, ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மோடி மற்றும் அமித்ஷா அதை மாற்றி இருக்கிறார்கள். ஆதரவு குறைவாக இருக்கும் மாநிலங்களவையில் முதலில் மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர். 

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. எதை அரசியல் ஆக்க வேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். 

மேலும் வரும்காலத்தில் தமிழக அரசியலின் மையமாக போயஸ்கார்டன் மாறுமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பதிலளித்தார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close