[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு

6-new-chief-secretaries-announced-by-mnm-party

மக்கள் நீதி மய்யம் கட்சியை விரிவாக்கம் செய்யும் வகையில் 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைவரின் கீழ் துணைத் தலைவர், 6 பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் என விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மண்டலங்கள் உருவாக்கப்படுவதாகவும், அவற்றிற்கு அதே மாவட்டத்தை சேர்ந்த 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 6 பொதுச் செயலாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளரியா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச்செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close