[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

திருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடி கைது 

couple-arrested-for-stealing-cell-phone

சென்னையில் திருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். 

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லிப்சா. இவர் கடந்த 12 ஆம் தேதி தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லிப்சாவின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் லிப்சா புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்மூலம் செல்போன் பறிக்க உபயோகித்த பல்சர் பைக்கின் நம்பர் பிளேட்டை விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சைதாப்பேட்டை லாட்ஜ் பகுதியில் அவர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சைதாப்பேட்டையில் உள்ள லாட்ஜ்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ராஜு, சுவேதா ஆகிய காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். 

இதில் ராஜூ மீது ஏற்கனவே வடபழனி காவல்நிலையத்தில் செல்போன் பறிப்பு, வாகனத் திருட்டு ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. காதலி சுவாதி கரூரை சேர்ந்தவர் என்பதும் அவர் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close