[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சொந்த ஊர் குளத்தை தத்தெடுத்து தூர்வாரிய அமெரிக்க மாணவி

america-student-involves-pond-rejuvenation-at-her-native-place

அமெரிக்காவில் 12-ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி, தமிழ்நாட்டில் தனது பூர்வீக கிராமத்தில் உள்ள குளத்தை தத்தெடுத்து கிராம மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மேல வெள்ளூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சரவணன்- சரளா தம்பதியின் மகளான காவ்யா, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 12-ஆவது கிரேடு பயின்று வருகிறார். இவரது குடும்பம் கடந்த 35 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை, சொந்த கிராமமான மேல வெள்ளு‌ரில் குலதெய்வ‌ வழிபாட்டுக்கு வருவது வழக்கம்.

கடந்த மாதம் பூர்வீக கிராமத்திற்கு வ‌ந்தபோது அங்குள்ள முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஊருணி, சீமைக்கருவேல மரங்கள் மண்டி 10 ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்ததை பார்த்துள்ளார் காவ்யா. இதன்பின்னர் சிவகங்கை ஆட்சியரை நேரில் சந்தித்து பெரிய ஊருணியை தூர்வார முறையாக அனுமதி பெற்று, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இளம் பருவத்திலேயே இந்த மாணவி வெளிப்படுத்தும் சொந்த மண் மீதான பாசம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. வெளிநாட்டில் வசதி வாய்ப்புடன் இருந்து சொந்த ஊரை மறப்பவர்களுக்கு மத்தியில் ஊருக்காக மாணவி செய்யும் சேவை கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close