[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு வீரதீர விருது வழங்க பரிந்துரை?

award-to-couple-for-courage-activities-against-robbery-man

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர், வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த முதியவர் சண்முகவேல் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது, அவரும் அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து கொள்ளையர்களை துணிச்சலுடன் தாக்கினர். இதில் நிலைகுலைந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், கொள்ளையர்களை விரட்டியடித்த, அவ்விருவரின் வீரதீரச் செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டும் தெரிவித்தார். இந்நிலையில் கொள்ளையரை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்க ஆட்சியர், தமிழக அரசிற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close