[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

காவிரியில் வெள்ளம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு

flood-at-cauvery-order-to-take-precautions

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காவிரி கரையோரம் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் நாகை ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், காவிரி ஆற்றில் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அல்லது மீன்பிடிக்கவோ யாரையும் அனுமதிக்கக் கூடாது, குறிப்பாக காவிரிக் கரையின் ஆபத்தான பகுதிகளில் செல்ஃபி எடுக்கக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரி கரையோரம் உள்ள கால்வாய்கள், ஆறுகள் மற்றும் இதர நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்று பெற்றோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close