[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

bomb-threat-to-mettur-dam-one-arrested

மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிலையில், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் சென்னை காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மிரட்டல் விடுத்த தேவகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அணையை திறக்க முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்திருந்ததால், மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த பிறகு அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close