[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

கிடுகிடுவென உயர்கிறது மேட்டூர் அணை நீர்மட்டம்..!

mettur-dam-water-level-increased

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணை விரைவில் முழு கொள்ளவை எட்டுகிறது.

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழை காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கேரளாவின் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், கர்நாடகாவின் கபினி அணைக்கான நீர்வரத்து கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு, ஒரு லட்சம் கன அடியிலிருந்து 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் நிரம்பியுள்ளன. அந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் ஒரு லட்சத்து 87 ஆயிரம் கன அடி நீர், நீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வருகிறது. கிருஷ்ண சாகர் அணை தற்போது 123 அடியை எட்டியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி விநாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மொத்தமாக காவிரி ஆற்றில் 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 80 அடியை எட்டியுள்ள அணையின் நீர்மட்டம் ஒரிரு நாளில் 100 அடியை எட்டும் எனத் தெரிகிறது. காவிரி ஆற்றில் இதே அளவு நீர் வரும்பட்சத்தில், விரைவில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியை விரைவில் எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close