[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இன்றைய முக்கியச் செய்திகள்...!

today-top-news-12082019

கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் விரைவில்  மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும்.

தென்மேற்கு பருவமழையின் சீற்றத்திற்கு நாடெங்கும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169 ஆக உயர்வு. வயநாட்டில் நிலச்சரிவில் புதையுண்ட 59 பேரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டதால், மக்கள் உற்சாகம்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் கடும் உயர்வு. பட்டியலின மாணவர்களுக்கு 24 மடங்கும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு இரு மடங்கும் அதிகரிப்பு.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி. கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close