[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

5 மணி நேரத்தில் செல்போன் கொள்ளையனை மடக்கி பிடித்த போலீஸ்

police-arrested-cellphone-snatchers

செல்போன் பறிப்பு கொள்ளையனை 5 மணி நேரத்தில் தேனாம்பேட்டை தனிப்படை போலீஸ் கைது செய்தனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் சேஷாத்திரி (56). இவர் இன்று காலை பாண்டிபஜார் பகுதியில் நடந்து சென்ற போது, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான விலைஉயர்ந்த செல்போனை அடையாளம் தெரியாத நபர் பைக்கில் வேகமாக வந்து பறித்து சென்றார்.அதிர்ச்சியடைந்த சேஷாத்திரி இது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தேனாம்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், தலைமைக்காவலர் பொன்னுவேல் ஆகியோர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர், பைக் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அது திருட்டு பைக் என்பது தெரிந்தது. பிறகு பைக் திருடர்கள் பதுங்கி இருக்கும் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அமைந்தகரை பகுதியில் வழிப்பறி கொள்ளையன் பாட்ஷா பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அதிரடியாக பாட்ஷாவை கைது செய்தனர். வழிப்பறி கொள்ளை நடந்து 5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close