[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா பயணம்

cm-palanisamy-to-visit-usa

தொழில் முதலீடுகளை பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

14 நாட்கள் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அங்கு வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழக முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், பால்வள மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.

இம்மாதம் 28-ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும், அவருடன் சில அமைச்சர்களும், அதிகாரிகளும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் ‘யாதும் ஊரே’ திட்டத்தின் கீழ் முதலீடுகளை பெறுவதற்காக இந்தச் சுற்றுப் பயணத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி வகித்த போது, தொழில் முதலீடு பெற இதுபோன்ற வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close