[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு - உரிய இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்

women-dead-in-hospital

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருக்களம்பூர் பகுதியை சேர்ந்தவர் பபிதா. இவர் கடந்த மாதம் 24-ஆம் தேதி குடவாசல் அரசு மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பபிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பிற்கு காரணம் மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியர்களின் அலட்சியப் போக்கும் தான் காரணம் என கூறி அவர்களுடைய உறவினர்களும் நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மூன்று செவிலியர்கள் உட்பட 5 பேரை மருத்துவக் கல்லூரி முதல்வர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்

இந்த நிலையில் உயிரிழந்த பபிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close