[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

“தொழிலாளர் நீதிமன்றங்கள் சூதாட்ட களமல்ல”- நீதிமன்றம் கண்டனம்

labor-courts-are-not-a-gambling-field-chennai-high-court

தொழிலாளர் நீதிமன்றங்கள் சூதாட்ட களமல்ல என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

உரிய விடுப்பு அனுமதியின்றி 1990 ஜூன் முதல் 1991 ஏப்ரல் வரை 10 மாதங்கள் பணிக்கு வராததால் துப்புரவு பணியாளர் பென்சிலய்யாவை பணிநீக்கம் செய்து சென்னை மாநராட்சி, 1993-ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பென்சிலய்யா 14 ஆண்டுகள் கழித்து 2007-ல் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த 2-வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், பென்சிலய்யாவை பணிநீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. கடந்த 2012-ல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து பென்சிலய்யா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பணிநீக்கத்தை எதிர்த்து தனது இஷ்டம் போல 14 ஆண்டுகள் கழித்து வழக்குத் தொடர, தொழிலாளர் நீதிமன்றம் ஏதும் சூதாட்ட களமல்ல என கண்டனம் தெரிவித்தார். மேலும், பணி தொடர்பான வழக்குகளை மூன்று ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தொழில் தகராறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி,  பென்சிலய்யாவை  பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையை தொழிலாளர் ஆணையம் தீர்ப்பளித்த 2012 முதல் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 15 நாட்களுக்குள் வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close