[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நாளை முதல் மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

rain-intensity-to-come-down-in-tn-kerala-karnataka-says-imd

நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த மழை நாளை முதல் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

வரும் 12 ஆம் தேதி வட மேற்கு வங்க கடலில் ஒரு தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் வரும் 13 ஆம் தேதி முதல் மழை மீண்டும்  அதிகரிக்கும். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா லட்சத்தீவு கோவா கடலோர பகுதிகளில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close