[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-important-news

வேலூரில் திமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கான வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகார பலம், பண பலத்தை திமுக தோற்கடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள், அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கராச்சி - ஜோத்பூர் இடையே இயக்கப்பட்ட தார் எக்ஸ்பிரசையு‌ம் பாகிஸ்தான் நிறுத்தியது.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் முன் எப்போதும் இல்லாத அளவாக கடந்த 3 நாட்களில் 213 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சியில் இதுவரை பெய்திராத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 91 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் மட்டும் 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் முன்பதிவு தொகையை அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை பெறலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலில் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான விருது தவிர வேறு எந்த பிரிவிலும் தமிழ் திரைப்படங்களும், கலைஞர்களும் தேர்வாகவில்லை.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ள நியைலில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close