[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சாவியை மறைத்து வைத்ததன் விபரீதம் - 6 லட்சம், 26 சவரன் கொள்ளை

3-women-theft-26-pawns-gold-and-6-lakhs-in-virudhunagar

விருதுநகரில் சாவியை மறைத்து வைத்துவிட்டு சென்ற நபரின் வீட்டில் 3 பெண்கள் புகுந்து 26 சவரன் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோனுகால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி சாவியை கதவின் மேல் மறைத்துவைத்து விட்டு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மூன்று பெண்கள், அவர் இல்லாத நேரத்தில், சாவியை எடுத்து வீட்டை திறந்து, நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து இருக்கிறார்கள். 

பின்னர் வீட்டை பூட்டி, சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளனர். வீடு திரும்பிய முருகன், பிரோவை திறந்து பார்த்தப் போது, நகை மற்றும் பணம் கொள்கையடிக்கப்பட்டது தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் படியான மூன்று பெண்கள் கைகக்குழந்தையோடு பழையதுணி வாங்குவதுபோல் காலையில் இருந்து சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இந்தக் கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்த மல்லாங்கிணறு காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் 3 பெண்‌களையும் தேடி வருகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close