[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

10 ஆண்டுகள் இல்லாத கனமழை : அபாய நிலையில் கூடலூர்

heavy-rain-fallen-in-nilgiris-after-10-year

கூடலூரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கொட்டித் தீர்க்கும் கனமழையால், ஏராளமான கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 4வது நாளாக கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கூடலூரில் 24.1 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. தொடர்மழையால் கூடலூரில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் முதல் மைல், வேடன்வயல், இருவயல், தேன்வயல், மங்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

150க்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மரங்கள் சாய்ந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்வதால் தரை பாலங்கள், ஆற்று நீரால் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை வருவாய் துறையினர் முடுக்கி விட்டுள்ளார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

கனமழை தொடர்வதால் மேலும் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பழங்குடி கிராமங்களில் வீடுகளில் இருந்து உடைகள் மற்றும் உடமைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close