[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

‘தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு ’ - வானிலை மையம்

heavy-rain-can-fall-in-tamil-nadu-on-next-24-hours-chennai-met

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் உரு‌வான காற்றழுத்தாழ்வு மண்டலம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி மற்றும் கோவையின் மலையோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் 40 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் மத்திய, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால், அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close