[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஆபத்தை உணராமல் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

school-and-college-students-dangerous-travel

மேலூர் அருகே ஆபத்தை உணராமல் வாகனங்களில் பின்னால் நின்றபடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயணிப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அழகர்கோயில் சாலையில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. இங்கு மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் பள்ளி செல்லும் நேரத்தில் மேலூரிலிருந்து இரண்டு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இதில் தங்களுடைய அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்களும், மற்றும் அழகர்கோயிலுக்கு செல்லும் பொதுமக்களும் அதிகளவு செல்வதால் மாணவ, மாணவிகள் அவற்றில் செல்லமுடியாத நிலை உள்ளது.

இதனைப் பயன்படுத்தி  மேலூரிலிருந்து அழகர்கோயிலுக்கு செல்லும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட அதிகளவு ஆட்களை ஏற்றிச் செல்லுகின்றனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டும் என்பதால் மாணவர்கள் வாகனத்தின் பின் பகுதியில் தொங்கி கொண்டும் ஆபத்தை உணராமல் பயணம் செய்கின்றனர்.

அதேபோல் மாணவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் மூன்று, நான்குபேர் என அமர்ந்து அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அதிக வளைவு மற்றும் மலை சாலையான, இந்தச் சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறுவதற்கு முன்பாக, அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் மாணவர்கள் மீது  போக்குவரத்து மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close