[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

சென்னையில் பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை

petrol-punk-employee-suicide-in-chennai

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த ஊழியர் அங்குள்ள கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை
செய்து கொண்டார். 

சென்னையை அடுத்த செங்குன்றத்தைச் சேர்ந்த உதயகுமார், கடந்த சில ஆண்டுகளாக சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல்
பங்க் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். உதயகுமார் பெட்ரோல் பங்க் பணத்தை கையாடல் செய்துவிட்டார் என நிர்வாகம்
குற்றஞ்சாட்டியதாக தெரிகிறது. மேலும், கடந்த ஒருவாரமாக அவரை வீட்டிற்கு அனுப்பாமல் பங்க்கிலேயே வைத்து அடித்து
உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உதயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களது
பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close