[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

வேலூரில் நாளை தேர்தல்... பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீசார்..!

lok-sabha-election-at-vellore-tomorrow

வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‌வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை காலை ‌‌7 ம‌ணி‌‌ ‌முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் மேற்பார்வையில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபாட் எந்திரங்களும் அனுப்பப்பட்டுள்ளன. பதட்டமானவை எனக் கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும், கூடுதல் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்கள் ‌அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. வரும் 9-ஆம் தேதி வாக்கு‌ எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close