[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தாயும் சேயும் உயிரிழப்பு : மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்

mother-and-infant-dead-near-dharmapuri

தருமபுரி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், தாயும் சேயும் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த செக்கொடி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் தருமபுரி அரசு ‌மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை10 மணியளவில் ஜோதிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில நிமிடங்களிலேயே அக்குழந்தை இறந்துவிட்டது. இதனிடையே ஜோதிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு இருந்ததால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இரவு 11 மணியளவில் ஜோதியும் உயிரிழந்தார்.

இதனையடுத்து, மருத்துவர்களின் கவனக் குறைவால் தான் ஜோதியும், சிசுவும் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், இப்பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜோதியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close