[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

‘கும்பகோணம் ஐயர் சிக்கன்’ - விளம்பரமும் மன்னிப்பும் !

hotel-aiyangar-chicken-is-a-new-name-of-the-hotel-milagu

மதுரையில் ஒரு உணவத்திற்கு ‘கும்பகோணம் ஐயர் சிக்கன்’ என்ற பெயரில் விளம்பரம் செய்த உணவகத்தை முற்றுகையிட்டு பிராமண சமுதாயத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு நிறுவனமும் ஏதாவது ஒரு வகையில் தங்களது நிறுவனத்தை வித்தியாசமாக விளம்பரம் செய்வது வழக்கம். அந்த வகையில் மதுரையில் ஒரு உணவக நிர்வாகம் தங்களது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வித்தியாசமாக விளம்பரப்படுத்துவதாக நினைத்து சர்ச்சைக்கு வித்திடும் வகையில் பெயரை தேர்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை வடக்கு மாசி வீதியில் மிளகு ஹோட்டல் என்ற அசைவ உணவகம் இயங்கி வருகிறது. ‌அந்த உணவகத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் 'கும்பகோணம் ஐயர் சிக்கன்' என்ற பெயரில் முகநூலில் விளம்பரப்படுத்தியது. 

இதை சமூகவலைதளங்களில் பார்த்த ஒருங்கிணைந்த பிராமண சமுதாயத்தினர் 50 க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குவாதமும் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திலகர் திடல் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உணவக நிர்வாக தரப்பில் மேலாளர் ராமநாதன் கும்பகோணம் ப்ரைடு சிக்கன் என்றுதான் டைப் செய்ய சொன்னதாகவும் ஆனால் கணிணி ஆப்பரேட்டர் தவறுதலாக கும்பகோணம் ஐயர் சிக்கன் என டைப் செய்துவிட்டதாகவும் கூறி தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும் முகநூலில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவு நீக்கப்பட்டது.‌ இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close