[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மாணவி தற்கொலை - நீட் தேர்வே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

girl-suicide-in-perambalur

பெரம்பலூர் அருகே மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகே தீரன் நகரை சேர்ந்த செல்வராஜ் - சுசீலா தம்பதியின் மகள் கீர்த்தனா. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1056 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நீட் தேர்வுக்காக சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். பின்னர் நடைபெற்ற நீட் தேர்வில் கீர்த்தனா 352 மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சி பெறவில்லை எனத் தெரிகிறது. 

இதனால் ஒரு மாத காலமாக மன உளைச்சலில் கீர்த்தனா இருந்ததாகவும் இன்று பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்  உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close