[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து- சேவை பாதிக்கப்படும் என அறிவிப்பு

fire-accident-in-bsnl-office

சென்னை பாரிமுனையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில், ஏற்பட்ட தீ விபத்தால் சேவை பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாலை 5.30 மணியளவில், தரை த‌ளத்தில் வயர்கள் தீப்பற்றி எரிந்ததால் இந்த விபத்து நேர்ந்தது. தகவலின்பேரில், 8-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சர்வர்கள் சேதமடைந்துள்ளதால் பூக்கடை, துறைமுகம், திருவொற்றியூர் பகுதிகளில் சேவை பாதிக்கப்படும் என பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வடசென்னைக்கான பிரதான இணைப்பகத்தில் தீ விபத்து ஏற்‌பட்டதால் அங்கு செல்போன், லேன்ட்லைன், பிராட் பேண்ட் சேவைகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வடக்கு கடற்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close