[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

“என்னை நம்பி 3 பிள்ளைங்க இருக்கு”- பணிப்பெண் மாரியம்மாளின் கடைசி போராட்டம்..!

nellai-3-murder-case-criminal-statment

முன்னாள் மேயர் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாளை கொலை செய்தது ஏன் என கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார். மரணத் தருவாயில் மாரியம்மாள் பேசிய வார்த்தைகள் என்னவென்று தெரியவந்தால், உங்கள் இதயம் கனத்துப் போகலாம்.

முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டது நெல்லையை மட்டுமல்ல, தமிழகத்தையே அதிரச் செய்த சம்பவம். தம்பதி இருவரும் கொல்லப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ஒரு பாவமும் அறியாத வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாளின் உயிர் பறிக்கப்பட்டது தான், கொடுமையிலும் கொடுமை.

கடந்த 23-ஆம் தேதி நடந்த கொலை தொடர்பாக தனிப்படையால் கைது செய்யப்பட்டார், திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. விசாரணையின் தொடக்கத்தில் பல கேள்விகளுக்கு முரணாக பதிலளித்த கார்த்திகேயன், நீங்கள் போலீஸ் தானே அப்போ எல்லாத்தையும் நீங்களே கண்டுபிடிங்க எனக்கூறி காவலர்களை தலைசுற்ற வைத்திருக்கிறார்.

அதன்பின் நடந்த விசாரணையில், மாரியம்மாளை அவர் ஏன் கொலை செய்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிருக்குப் போராடிய அவரின் இறுதி நொடிகளை நினைத்தால் பதற்றத்தில் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கக்கூடும்.

சம்பவத்தன்று உமாமகேஸ்வரியையும், அவரின் கணவர் முருகசங்கரனையும் குத்திக் கொன்றுவிட்ட கையில் கத்தியோடு நின்றிருக்கிறார் கார்த்திகேயன். அலறல் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து ஓடி வந்த மாரியம்மாள், கூச்சலிடத் தொடங்கியுள்ளார். கொலை வெறியோடு இருந்த அவர், மாரியம்மாளை வெளியே போகச் சொல்லி எச்சரித்திருக்கிறார். அதிர்ச்சியில் உறைந்த மாரியம்மாள் அங்கிருந்து செல்வில்லை. ஒருவேளை மாரியம்மாள் தப்பிச் சென்றுவிட்டால், காவல்துறையிடம் தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில், அவரை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார் கார்த்திகேயன்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியம்மாள், என்னை நம்பி 3 பிள்ளைங்க இருக்கு, என்ன ஒன்னும் பன்னிடாத என கெஞ்சியிருக்கிறார். அவர்கள் ஆண் பிள்ளைகளாக இருக்கும் என்றும், எதிர்காலத்தில் அவர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என நினைத்து மாரியம்மாளை கொன்றேன் என கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்ததாக கூறுகிறது காவல்துறை. சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணைக்குப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close