[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

திருமாவளவன் செய்ததை திமுக-அதிமுக ஏன் செய்யவில்லை ? - சீமான் கேள்வி

naam-tamilar-party-leader-seeman-question-to-dmk-and-admk

அற்புதம்மாளுடன் சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த திருமாவளவன் போல அதிமுக மற்றும் திமுக இதுவரை ஏன் செய்யவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமிக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். மாங்காய் மண்டியில் இருந்து பழைய பேருந்து நிலையம், வேலப்பாடி, சாய்நாதபுரம் பாகாயம் வரை அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது புதியதலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், “38 எம்.பிக்களின் செயல்பாடுகள் ஒன்றும் இல்லை. என்.ஐ.ஏ விவகாரத்தில் ஆதரித்து வாக்கு செலுத்திவிட்டார்கள். பின்னர் வெளியே வந்து மாற்றி பேசி, திமுக இரட்டை வேடம் போடுகிறார்கள். 

முத்தாலக் விவகாரத்தில் 29 பேர் வெளியேறாமல் எதிர்த்து வாக்களித்திருந்தால் முத்தாலாக் தோற்கடிக்கப்பட்டிருக்கும். வெளிநடப்பு செய்வது என்பது மறைமுக ஆதரவு தான். இவற்றை நுட்பமாக மக்கள் கவனிக்கிறார்கள். நளினி பரோல் நீட்டிப்பு என்பது சட்டம் சார்ந்தது. 7 பேர் விடுதலை தொடர்பாக திருமா, அற்புதம்மாள், ரவீக்குமார் சந்தித்த முயற்சியை இத்தனை நாட்களாக ஏன் அதிமுக, திமுக கட்சிகளும் செய்யவில்லை ? 2 உறுப்பினர்களை கொண்டவர்கள் முயற்சி செய்யும் போது ஏன் திமுக செய்யவில்லை ? அவர்கள் செய்திருந்தால் கூடுதலான நம்பிக்கை பிறந்திருக்கும்” என்று தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close