[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

“காவிரி ஆணையத்தின் பணி தொடரும்” - அமைச்சர் கஜேந்திர சிங்

minister-kajendra-singh-speech-about-cauvery-commission

நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்பாயம் அமைக்கப்பட்டாலும் காவிரி ஆணையத்தின் பணி தொடரும் என ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் உறுதியளித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னைக்கு தீர்ப்பாயம் தனியாக அமைக்கப்பட்டது போலவே பல்வேறு நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கு, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நதிநீர் பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்து தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முடிவு செய்தது. அதற்காக புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் மீதான விவாதம் தற்போது மக்களவையில் நடைபெற்று வருகிறது. 

இதனால் தமிழக அரசு போராடி பெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் நிலை என்னவாகும் என மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்பாயம் அமைக்கப்பட்டாலும் காவிரி ஆணையத்தின் பணி தொடரும் எனத் தெரிவித்தார். ஒரே தீர்ப்பாய மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என விளக்கமளித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close