[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

பொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை

income-tax-raid-at-many-places-in-pollachi

வரி ஏய்ப்பு செய்ததாக பொள்ளாச்சியில் பிரபல நகைக்கடைகள், ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சி கடைவீதியில் செயல்படும் சின்ன அண்ணன் ஜுவல்லரி மற்றும் கணபதி ஜூவல் சிட்டி உள்ளிட்ட நகை கடைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கடை ஊழியர்களை வெளியே விடாமலும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டனர். கல்குவாரி, பல்வேறு வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் ஈஸ்வரமூர்த்தி, பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் சசிகுமார் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

மேலும் பொள்ளாச்சி பகுதியில் இதே போல பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பொள்ளாச்சியில் ஒரே நாளில் பல இடங்களில் 8 மணி நேரத்திற்கு மேல் வருமானவரித்துறையினர்  சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close