[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

இன்றைய முக்கியச் செய்திகள்..!

top-news-30072019

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயன் தனி ஆளாக வீடு புகுந்து 3 பேரை கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகிறது. எம்.பி.க்கள் தவறாமல் அவைக்கு வர பாஜக, காங்கிரஸ் கட்சி சார்பில் கொறடா உத்தரவிட்டுள்ளார்.

அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால், நாளை பகல் 12 மணிக்கு மேல் பக்தர்கள் வரிசையில் நிற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாச ராவ் உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 246 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் 13.5 கிலோ போதைப்பொருட்களை வருவாய் புலனாய்வுத் துறை  பறிமுதல் செய்தது. ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close