[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்காக பாடுபடுவது திமுக - ஸ்டாலின் 

stalin-canvasing-in-vellore

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவது திமுக என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர்கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு பரப்புரை சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில் வேலூர் தொகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவது திமுக. வருமான வரித்துறை உதவியுடன் சதி செய்து கடந்த முறை தேர்தல் நிறுத்தப்பட்டது. 38 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில் நமது கட்சியே வெற்றி பெற்றது என்பது நாடறிந்த உண்மை. ஐந்தரை லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுக தான் என்பதை நிரூபித்து கொண்டிருகின்றோம். இந்தியாவிலேயே அதிக சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சியும் திமுகதான் என்பதை புள்ளிவிவரங்கள் எடுத்து கூறுகின்றன” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close