[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு துண்டுபிரசுரம் கூட வெளியிடவில்லை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

madras-high-court-dissatisfied-about-tamilnadu-activities-in-honor-killed

ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு துண்டுபிரசுரம் கூட வெளியிடவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

கடந்த 9 ஆம்  தேதி ஆணவக்கொலை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது. ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என ஏற்கனவே நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து காவல்நிலையங்களிலும் சிறப்புப்பிரிவு அமைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து ஆணவக்கொலை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை எனவும் ஆணவக்கொலையை தடுக்க விழுப்புணர்வுக்காக தமிழக அரசு ஒரு துண்டு பிரசுரத்தை கூட வெளியிடவில்லை எனவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். 

காவல்நிலையங்களில் சிறப்பு பிரிவு அமைப்பது சாத்தியமில்லாத விஷயம் எனவும் நாளை உதவி ஐ.ஜி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close