[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்
  • BREAKING-NEWS உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கருஞ்சிறுத்தை: வைரல் வீடியோ

black-panther-in-sathyamangalam-tiger-reserve

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று பாய்ந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை அடிக்கடி கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இங்குள்ள புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 120 ஐ தாண்டியுள்ளதாக அண்மையில் வனவிலங் குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தையுடன் கருஞ்சிறுத்தையும் தாவி குதித்தும் ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. காட்டில் இரு சிறுத்தைகளும் விளையாடிக்கொண்டு தாவி குதித்தும் ஓடுகிறது. அடர்ந்த பச்சை பசலென காட்டுப்பகுதியில் விளையாடும் இந்த காட்சி சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. 


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் முதன் முதலாக கருஞ்சிறுத்தை தென்பட்டதாக வெளியான வீடியோவை பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close