[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

‘உயிருக்கு ஆபத்து’ - காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த திமுக பிரமுகர் மகள்

chennai-couple-surrender-in-madurai-police-station

சென்னை காதல் ஜோடி பாதுகாப்பு கோரி மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லி ஸ்ரீ வித்திய கணபதி தெருவைச் சேர்ந்தவர் நிதர்சன. சேஷா நகரை சேர்ந்தவர் மைக் ரிச்சர்ட்சன்.  
இருவரும் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைத்து காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்வதற்கான வயது வரம்பு மிக்கவர்களாக உள்ள நிலையில், பாதுகாப்பு கோரி திருப்பரங்குன்றம் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனிடையே நிதர்சனவை காணவில்லை என பூந்தமல்லி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி சென்னை பூந்தமல்லி காவல்நிலைய காவலர்கள், மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நிதர்சனாவை அழைத்து செல்ல வந்துள்ளனர்.

ஆனால், சென்னை சென்றால் தங்கள் உயிருக்குப் ஆபத்து என்று நிதர்சன மற்றும் மைக் ரிச்சர்ட்சன் அவர்களுடன் செல்லவில்லை என்று கூறி வருகின்றனர். தற்போது இந்த வழக்கானது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிதர்சன மற்றும் மைக் ரிச்சர்ட்சனரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நிதர்சனவின் தாய் காயத்ரி ஸ்ரீராம், 2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர். தற்போது சென்னை திருவள்ளுவர் தெற்கு தொகுதி துணை மாவட்ட செயலாளராக உள்ளார். இதனிடையே வீட்டில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக நிதர்சன குற்றஞ்சாட்டியிருந்தார். அதனால்தான் பாதுகாப்பு கேட்டு மதுரையில் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close