[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ் மொழியின் தோற்றம் குறித்த தவறான பாடப்பகுதி நீக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்

controversial-pages-related-to-tamil-language-origin-will-be-removed-from-text-minister-sengottaiyan

தமிழ் மொழியின் பழமை குறித்த தவறு பாடபுத்தகத்தில் உடனடியாக திருத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்ட புத்தகத்தில், தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் எழுதிய இந்தப் பாடத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அதில், தமிழ் கி.மு. 300ஆம் ஆண்டில் உருவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் பிற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு. 1250ஆம் ஆண்டிலும், கிரேக்கம் கி.மு. 1500ஆம் ஆண்டிலும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆம் ஆண்டிலும் உருவானதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்மொழி 5000 ஆண்டுகள் பழமை ஆனது என அறிஞர்கள் கூறிவரும் நிலையில், தற்போது 2300 ஆண்டுகள்தான் பழமையானது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

               

இந்நிலையில், தமிழ் மொழி கிமு 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியது என்று 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது உடனடியாக திருத்தப்படும்  என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். அத்துடன், பாடப்புத்தகத்தில் உள்ள தவறுகளை திருத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close