[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

என்.எல்.சி ஊழியர் கொலை வழக்கு - இருவர் கைது 

two-accused-arrested-for-nlc-worker-death-case

நெய்வேலி என்எல்சி ஊழியர் பழனிவேல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த நாமக்கல் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.எல்.சி ஊழியராக பணியாற்றி வந்தவர் பழனிவேல். இவரது மனைவி அஞ்சலை. இந்நிலையில் பழனிவேல் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். பின்னர் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் பழனிவேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பழனிவேலின் சடலம் விழுப்புரம் சின்னசேலம் அருகே  கண்டெடுக்கப்பட்டது. 

இதையடுத்து மனைவி அஞ்சலை உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை தொடர்பாக அஞ்சலையிடம் விசாரணை நடத்தும் நெய்வேலி டவுன்சிப் போலீஸ் மேலும் 3 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே கீழ்குப்பம் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் போலீஸைக் கண்டு ஓடியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் நெய்வேலியில் கொலை செய்யப்பட்ட பழனிவேலுவின் கொலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close