[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

சமூக ஆர்வலர் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு

social-activist-murder-case-transferred-to-cbcid-chennai-hc

சமூக ஆர்வலர் தணிக்காசலத்தின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தணிக்காசலம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடியதுடன், அவற்றை அகற்ற கோரி வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 2014 நவம்பர் 11-ஆம் தேதி அவரை அடித்து கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தணிக்காசலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் அளித்த புகாரில் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தினர், 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வெங்கடேசன் என்பவருக்கு எதிராக மட்டும் திருப்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மற்ற 6 பேரை காப்பாற்றும் நோக்கில் காவல்துறை செயல்படுவதாகவும், முறையான புலன் விசாரணையை நடத்தவில்லை என்பதாலும் ஆம்பூர் தாலுகா காவல் நிலைய வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி சுப்பிரமணியன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஒருவருக்கெதிராக மட்டுமே காவல்துறை விசாரணையை நடத்தி உள்ளது ஆவணங்களில் தெரிய வந்துள்ளதாக கூறி, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றுவதாக உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி-க்கு வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கும், அதை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து முறையாக விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிசிஐடி-க்கும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close