[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அத்திவரதரை காண திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் மயக்கம்

stampede-at-adhi-varadhar-dharshan

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்றனர்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் அத்திவரதர் வைபவத்துக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதால், கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அத்திவரதர் வைபவத்தின் 25-ஆவது நாளான இன்றும் காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். வரிசையில் காத்திருந்த‌ ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர், கூட்டநெரிசலில் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் நால்வரும் தரிசனத்துக்கு அனுப்பப்பட்டனர். இன்று மட்டும் 180 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்ததால் ஏற்பட்ட அயர்ச்சிக்காக சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் விரதம் இருந்து தரிசனத்துக்கு வருவதாகவும், வயதானோர் தாங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை உள்கொள்ளாமல் இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close