[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

சிறையில் இருந்து பரோலில் வெளிவந்தார் நளினி

nalini-comes-out-on-parole-today

மகளின் திருமணத்துக்காக வேலூர் மகளிர் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகளின் திருமண தேவைக்காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று கேட்டிருந்தார். இந்த வழக்கில் தாமே வாதாடிய நளினி, தனது மகளுக்காக தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் எனவே திருமணத்துக் காக 6 மாதம் பரோல் வேண்டும் என்று கோரியிருந்தார். 

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து, அவர் இன்று பரோலில் வெளியேவர உள்ளதாக தகவல் வெளியானது. காலையில் பரோல் உத்தரவு கிடைத்தவுடன் சுமார் 8:30 மணி அளவில் அவர் சிறையிலிருந்து வெளியே அனுமதிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.

அதன்படி இன்று காலை 9 மணியளவில் அவர் வேலூர் மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்தார். சத்துவாச்சேரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில பொதுசெயலாளர் சிங்கராயன் என்பவர் வீட்டில் அவர் தங்குகிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close