[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-23-07-2019

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார். நம்பிக்கை தீர்மானத்தின் மீது 3-வது நாளாக விவாதம் நீடித்த நிலையில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தம் செய்யும்படி மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி ஒரு வேண்டுகோளை பிரதமர் முன் வைக்கவே இல்லை என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் புதிய தலைமுறைக்கு பிரத்யேகப்
பேட்டியளித்துள்ளார்.

அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close