[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே கொலை செய்யப்பட்ட ஆசிரியை !

teacher-killed-by-his-husband-infront-of-students-in-madurai-thirumangalam

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு உதவிபெறும் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியை பள்ளி மாணவர்கள் முன்பு ஆசிரியையின் கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குரு முனீஸ்வரன், இவருடைய மனைவி ரதிதேவி(35). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகி ஹர்ஷவர்தன்(6) ஹர்ஷவர்த்தினி(6) இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளனர். பொறியாளரான குரு முனீஸ்வரன். இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கின்றனர்.

                      

ரதிதேவி காரியாபட்டி அருகே உள்ள சித்தனேந்தல் பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று பள்ளியில்  பாடம் நடத்திக் கொண்டிருந்த தனது மனைவியை பார்க்கப் போவதாக அனுமதி பெற்று வகுப்பறைக்கு சென்றார். பாடம் நடத்திக் கொண்டிருந்த தனது மனைவியிடம் குரு முனீஸ்வரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார் முனீஸ்வரன். 

                 

ரத்தவெள்ளத்தில் ரதிதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் டிஎஸ்பி அருண் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பள்ளி அறையிலேயே மனைவியை வெட்டி படுகொலை செய்த குரு முனீஸ்வரனை போலீசாரிடம் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

         

திருமங்கலம் தனியார் பள்ளியில் பள்ளியில் நுழைந்து ஆசிரியை அவருடைய கணவர் மாணவர்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close