[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

ஜெயலலிதா சொத்துகளின் மதிப்பு எவ்வளவு?: உயர்நீதிமன்றம் கேள்வி

what-is-the-asset-value-of-jayalalithaa-chennai-high-court

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில், தங்களை ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கக்கோரி தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன் ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தாலும் அதனை செலுத்தத் தயார் எனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், அதுதொடர்பாக மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  எனவும் வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close