[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது

youth-arrested-in-beef-controversy

மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டு முகநூலில் பதிவிட்டதால் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகமது பைசான் என்பவர் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட வீடியோவை முகநூலில் பதிவேற்றம் செய்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கும்பலால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக‌, தினேஷ்குமார், கணேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மதக் கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் முகமது பைசான், முகமது யூனுஸ், சாகுல் ஹமீது ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய முகமது பைசானை கீழ்வேளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close