[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

“மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

nirmala-sitharaman-speech-at-chennai

பிரதமர் மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனத் தெரிவித்தார். தமிழை வளர்ப்பதற்கான முயற்சியில் மத்திய அரசும் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை என்றும், சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி அமைச்சர்கள் சூட்கேசில் எடுத்து வருவார்கள். ஆனால் சமீபத்தில் தாக்கலான பட்ஜெட்டில் சூட்கேசுக்கு ‘பை..பை’ சொன்ன நிர்மலா சீதாராமன், அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் ஆவணங்களை எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close