[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-20-07-2019

உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் அம்மாநிலத்தில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்காக சிறை செல்ல தாம் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. சத்யபால் சிங், மனிதர்கள் துறவிகளில் இருந்து உருவானவர்களே தவிர குரங்கிலிருந்து அல்ல என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த திமுக எம்.பி. கனிமொழி, தனது பெற்றோர் சூத்திரர்கள் என்றார்.

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்களை மட்டுமின்றி, அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close